ஏரின் மாட்சி

எழத்தாணி போல் மண்ணில்
எழில் கோலம் போடும் ஏரே
பிறட்டி எடுத்தும்
புரட்டி எடுத்தும்
மண்ணின் வளமை ஏற்றுகின்றாய்
விளைச்சல் கலம்பகம் பாடுகின்றாய்
மையென துணைக்கழைக்கும் ஏறுகளையும்
மைந்தனெப் போற்றுகின்றாய்
கோட்டினிற்கும் வளைவினிற்கும்
பொருள் மிகுதேயெனக் காட்டுகின்றாய்
வயலின் வேள்வியை தொடங்கிவிட்டு
ஏறு நடை போடுகின்றாய்
இந்த உற்பத்தி நடை
போட யாருண்டோ
இத் தரணி தன்னில்
களஞ்சியம் திரட்டிய இறுமாப்பன்றோ
மண்ணை அகழ்ந்து பொன்னைக்
கொடுக்கும் மரத்தின் வண்ணமே
என் நெஞ்சமெனும் பரப்பு தொட்டு
எண்ண அறுவடை தந்திடுவாய்

எழுதியவர் : ரமணி (23-Feb-15, 6:07 pm)
பார்வை : 97

மேலே