மண்ணறைக்குள் ஒரு குமுறல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

(கல்லறை சென்ற மகனின் இரங்கல்-ஒரு கற்பனை)
அம்மா!அம்மா!ஆறடி வீடு
நெருக்கமாய் இருக்கு,நான்
கஷ்டத்துலே தான் இருக்கேன்.
நீ நலமா இருக்காயா?
இன்று வீட்டுலே என்ன கறி
அம்மா எனக்கு பிடித்த மீன்
கொழம்பா? தென்றலிலே வாடை
என் மூக்கே துளைக்குது.ரொம்ம
பசிக்குது ஒரு வாய் ஊட்ட மாட்டாயா?
அம்மா உனக்கு பசிக்குது என்றால்
உன் சேலை முடிச்சிலே எனக்காக
முடிஞ்சி வைச்சிருக்கும் முந்திரி
பருப்பே உண்ணு நான் இனி வரமாட்டேன்.
அண்ணன் இன்று வீட்டுக்கு வந்தானா?
மாத்திரை எடுத்து தந்தானா?தட்டுலே
சோறு வைச்சி உனக்கு என்னைப்போல
ஊட்டி விட்டானா?நான் கேட்கும் கேள்விக்கெல்லாம்
நீ பதில் சொல்கிறாய் ஆனால் எனக்குத்தான் கேக்குதில்லையே!
நேற்று நான் தம்பிக்கு அடிச்சேனே!
தங்கைக்கு திட்டினேனே!அவங்கக்கிட்ட
சொல்லம்மா இந்த பாசக்கார
அண்ணனை மன்னிச்சிக்கச் சொல்லி....
உனக்கு பிடித்த பட்டுச்சேலையும்
என்னிடம் நீ கேட்கின்ற நான்கு வளையல்களும்
வாங்கிக்கொடுக்க ஒரு ஊண்டில்லே
ஒன்டுரெண்டு ரூபாய் போட்டு வந்தனே!
அது நிரம்புவதற்கு முன் கடவுள்
என்டே வாழ்க்கையை முடிச்சிபோட்டான்.
அம்மா நீ என்னை நினைத்து வருந்தாதே?
நான் ராத்திரியிலே வீட்டுக்கு வந்து உன்ன
பார்த்துட்டுத்தான் போறன்,இன்னும் சில
வருஷத்திலே நான் உக்கி மண்ணோடு
மண்ணாய் போயிடுவேன்,அப்ப நீ
மூச்சிழந்தால் என் மேல் தூங்க வா அம்மா!
என்ன சாப்பிட்ட மண் உன்ன சாப்பிடாமே
பாசக்கார கடவுள் பார்த்துக்குவான்.