தூணாய் உயர்ந்திடு

காற்றிலே,
வீசும் காற்றிலே
குப்பைக்கூட கோபுரம் தொடலாமென்றால்
வீழ்ந்த இலை நான்
சிலையாவதில் வியப்பென்ன..?
விரல்களில் வித்தையும்
மனதிலே உறுதியும்
செயலிலே கருத்தையும்
வைத்த வித்தகனுக்கு
புல் கூட ஆயுதம் என்றால்
பச்சிலை நான் சிலையாவதில் வியப்பென்ன...?
உறுதியாய் போராடினால்
இறுதியில் வெற்றிதானே!
துணிந்தே பார்த்துவிடு
தூரங்கள் கடந்துவிடு
துயரை ஓட்டிவிடு
தூணாய் உயர்ந்துவிடு

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (24-Feb-15, 3:30 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : thoonaay uyarnthidu
பார்வை : 51

மேலே