அனாதை
கண்களின் புணர்வு
இதயத்தின் உணர்வு
கருப்பை இல்லாத கரு
காமம் உருவானது!
கவிதையின் ஊட்டம்
கம்பீரமாய் வளர்ந்தது!
ஈரைந்து மாதத்தில்
ஈன்றெடுத்தாள் ...
கட்டில் இல்லாத உறவு
தொட்டில் இல்லாத குழந்தை
பெயர் வைத்தாள்
'காதல்' என்று!
நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்ப்பிலே
தெளிவாக தெரிந்தும்
தெரியாமல் மறந்தாள்!
அறைக்குள் நடந்தது
அராஜகம்!
திரைக்கு வந்தது
திருட்டுத்தனம்!
முறையற்ற வளர்ப்பில்
முதல் குழந்தை!
முறையாக
பெயர் பெற்றது மறுகுழந்தை
'அனாதை' என்று!