நீங்கள் எவ்வழி

நீங்கள் எவ்வழி

ஆசிரியன் அவனியில் அந்தஸ்தில் உயர்ந்தவன்
ஒவ்வொரு மனிதனையும் அறிவிலும் பண்பிலும்
மிளிரச் செய்யும் அற்புதப் பிறவிகள் ஆசிரியர்
பெற்றவர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளின்
வளர்ப்பில் வாழ்வில் முக்கிய பொறுப்பானவர்கள்
அறிவின் வளர்ச்சியிலும் ஆன்மீக வளர்ச்சியிலும்
பிள்ளைகள் வளர்வது பொறுப்புள்ள ஆசிரியர்களால்
பெற்றோரின் அரவணைப்பில் அக்கறையுடன்
நல்ல பிள்ளைகளாய் வளர்வது பெற்றோர்களால்
இதை எல்லாம் கடந்து நல்ல பழக்கம் ஒழுக்கம்
கற்றுக் கொள்வது பாசம் உள்ள நண்பர்களால்
நண்பன் நல்லவனாய் அமைந்து விட்டால்
பிள்ளைகளும் சமூகத்தில் உயர்ந்து நிற்பர்
நண்பன் தீயவனாய் அமைந்து விட்டால்
சமுதாயத்தின் சாக்கடையில் பிள்ளைகளும்
ஆகையால் பெற்றோரே ஆசிரியரே /
உங்களை நம்பி உள்ள குழந்தைகளை
உண்மையின் ஒழுக்கசீலர்களாய் வளர்த்து விடுங்கள்
அவர்களின் எதிர்காலம் ஒளிமிக்கதாய் இருக்கட்டும்
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
இவ்வுலகில் பிறக்கும் போது
அந்த பிஞ்சு நெஞ்சுகளில் பதியத் தொடங்கும்
ஒவ்வொரு பதிவும் நம்மிடம் இருந்தே செல்கிறது
நம் பண்பும் அறிவும் நல்லெண்ணங்களும் தான்
குழந்தைகளின் வாழ்வின் சிறப்பு அம்சமாகும்.
பணத்தைத் தேடிக்கொள்ள பல வழிகள் உண்டு
பண்பையும் பாசத்தையும் கொட்டி வளர்க்கவும்
அறிவையும் ஆன்மீகத்தையும் ஊட்டி வளர்க்கவும்
அவர்களுக்கு நீங்கள் மட்டுமே
உங்களை மட்டும் நம்பி உள்ள நல்ல ஜீவன்கள் குழந்தைகள்
காத்துக் கொள்ளுங்கள் கடமையில் கண்ணாய் இருங்கள்
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
நீங்கள் எவ்வழியோ குழந்தைகளும் அவ்வழியே

எழுதியவர் : பாத்திமா மலர் (24-Feb-15, 1:39 pm)
Tanglish : neengal evvazhi
பார்வை : 72

மேலே