சொத்து

இல்லாதவனுக்கு பெறுவதி்ல் மகிழ்ச்சி
இருப்பவனுக்கு கொடுப்பதால்தான் மகிழ்ச்சி
பெறுபவனுக்கு ஒரு பங்கு மகிழ்ச்சி என்றால்
கொடுப்பவனுக்கு இரு பங்கு மகிழ்ச்சி
உனக்கு வேண்டாத எதுவாயினும்
எங்கோ,யாருக்கோ தேவையானதாயிருக்கும்
தரும் நிலையில் நாமிருந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்
பெறும் நிலையில் வாழ்வோரை இகழாதிருப்போம்
தருவதில் மகிழ்ச்சியையும்
வீண்பேச்சை அறுப்பதில் குணமும்
உபயோகமானதைச் செய்ததில் மனநிறைவும்
தருவதில் பெருமையும்
இன்னும் எத்தனையோ
உதவி செய்து வாழ்வதில்
உருவாகும் பெருங்குணமே
உன் வாழ்வில் நீ
சேமித்த சொத்து.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (24-Feb-15, 3:38 pm)
Tanglish : soththu
பார்வை : 63

மேலே