எதை தேடி ஓடுகின்றேன்
ஓடுகின்றேன் ஓடுகின்றேன்
எதை தேடி என் ஓட்டம் .?
சிறகுடைக்கப் பட்ட புறாக்களின் சிகப்பான உடலுக்கு வெள்ளை வர்ணம் தேடியா .?
இல்லை
பருவமெய்த முன்னே பதம் பார்க்கப் படும் சிறுமியின் வலிக்கு மருந்தினை தேடியா .?
பல்கலைகழகங்கள்
பகிடிவதை கழகங்கலானதால்
பறிபோகும் உயிர்களுக்கு விடிவொன்றை தேடியா .?
இல்லை
புலம்பெயர் தமிழர்கள் புலம்புகின்ற புரிந்துகொள்ள முடியாத உண்மைகளுக்கு அர்த்தம் தேடியா .?
எதை தேடி ஓடுகின்றேன்
எதற்காக ஓடுகின்றேன் ..?
புரியாத தேடல் தான்
புரியும் நாள் வரும்
அதுவரை ஓடுவேன்
ஓடிக்கேண்டே இருப்பேன் ...
நிறுத்தும் நாள் வரும் அன்று
நிண்டிருக்கும் என் ஓட்டம் மட்டும் அல்ல
உயிர் மூச்சும் .!