நேச நினைவுகள்
உன்னை நான்
ஏன் நேசிக்கின்றேன்?
ஒரு நாளில் ஒரு முறையாவது
உன்னை பார்க்க
வேண்டுமென்று
ஏன் விரும்புகின்றேன்?
உன்னோடு
பேசவேண்டுமென்று
ஏன் நினைக்கிறேன் ?
ஏதேனும் சுவாரசியமான
நிகவுழ்களை உன்னிடம்
சொல்ல வேண்டுமென்று
ஏன் நினைக்கிறேன் ?
புதிய பொருள்களை
வாங்கியவுடன்
உன்னிடம் அதை
காட்ட வேண்டுமென்று
ஏன் நினைக்கிறேன் ?
சில ஆடைகளை,
சில கைக்கடிகாரங்களை,
சில கைக்குட்டைகளை
பார்க்கும் போது
இவை உனக்கு
பொருத்தமாக இருக்குமே என்று
ஏன் நினைத்து பார்க்கிறேன் ?
பாண்பலை வானொலியில்
சில பாடல்களை
கேட்கும்போது
அது நமக்கானது என்று
ஏன் நினைக்கிறேன் ?
இந்த நினைவுகள்தான்
காதலா ?