புதருக்குள் வளரும் காதல் - காமம்
-- -- இது புதர் காதல் -- --
கோடையின் கொடுமையில்
கதிரவனின் வெப்பமீரலில்
இளைப்பாற எண்ணியே
உள்ளே நுழைந்தேன்
பூக்களுக்கே சொந்தமான
பூங்காவனம் அது
சில புதர்களையும்
உள் அடக்கியிருந்தது
அடர்ந்த மரமொன்றில்
தேனுரிஞ்சிய களைப்பில்
வண்டுகள் ஓய்விலிருக்க
நானும் அங்கேயமர்ந்தேன்
சிறிது நேரத்தில்
பெண் ஒருத்தியின்
முனங்கல் சத்தம்
காதுகளை எட்ட
என்னமோ ஏதோவென்று
பதற்றம் கொண்டே
விரைந்தேன்- சத்தம்
வந்த வழியே
முனங்கல் சத்தம்
பச்சை புதருக்குள்
அழைத்துச் செல்ல
அருகில் சென்றவன்
அதிர்ந்தேன் காட்சியில்
இருபது வயதுகூட
நிரம்பிராத இருவர்
காதல் போதையில்
ஆதாம் ஏவாளின்
முதல் குழந்தைகளாக
முத்த மழையில்
அரைகுறை ஆடையுடன்
என்னைக் கண்டே
அதிர்ந்த இருவரும்
யோசிக்கும் நேரத்தில்
ஓடி மறையலானர்
குழந்தைகள் நடமாடும்
பூங்காக்களில் இதுபோன்ற
குறும்படங்களும் - தினசரி
அரங்கேறிக் கொண்டிருக்கிறது
-- கற்குவேல் .பா .