உனக்காக -------------நிஷா
நினைவில் தவழுது சில
மணித்துளிகள். ..
கனவில் சிரிக்குது என்
கண்ணீர்துளிகள்....
காதல்...
காதல்..
காதல்...
எப்படி வந்தது காதல்
எனக்குள்?
எதைச் சொல்லுது காதல்
என்னிடம்?
விழியோடு விழிபேசிய
வினோத காதலா...
விண்ணோடு நான்மட்டும் பேசும்
விசித்திர காதலா...
ஊசலாடும் என்னுயிரில்
உறவாடும் உயிர்க்காதலா..
எப்படி வந்தது காதல்
எனக்குள்..?
இரகசியம் பேசும் உன்
விழிகளைப் பார்த்தா...
இரசிக்கத் தெரிந்த உன்
இதயம் பார்த்தா....
காற்றோடு நான் பேசிய
காதல் கவிதை உன்
கைசேரும் நாள் என்று
வருமோ...!
மழையோடு நான் சேர்ந்து
மண்ணை தொட்டு உன்
மடிமீது தவழும் நாள் என்று
வருமோ...!
விழியோடு உரசி உன்
வெண்ணிலவு முகமதில்
விரல்தொட்டு கோலமிடும்
நாள் என்று வருமோ....!
கனவோடு காத்திருக்கிறேன்
உனக்காக .. உனக்காக. ..