மகன்
ஆறு வருடம் போனதே தெரியவில்லை. மகனுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது...இம்முறை மருமகள் வீட்டிற்கு வரும் போது குறைந்தது மூன்று பவுன் நகையாவது மருமகளிடமிருந்து பிடுங்கியே ஆகனும் என்கிற முடிவில் ஆமினா தெளிவாக இருந்தாள்..ஆமினா எண்ணப்படி பேத்திக்கு மக்காவில் மொட்டையடிக்க வேண்டாம் என மகனின் ஆசைக்கு முற்று புள்ளி வைத்து மகனின் குடும்பத்தை சொந்த ஊருக்கு வரவழைத்தாள்..தாயின் எண்ணம் அறியாத மகன் குடும்பத்துடன் ஊர் வந்தான்...நல விசாரிப்புகளோடு முதல் நாள் ஓடியது.மறுநாள் பேத்திக்கு மொட்டையடிக்க அனைவரும் கிளம்பினர்..ஆமினா தன் கைகளில் இருந்த வளையல்களை கழட்டி மகளிடம் கொடுத்துவிட்டு வெறும் கைகளோடு மகனின் கண்களில் படும்படி வந்து அமர்ந்து கொண்டாள்..அனைவரும் கிளம்பி கொண்டுயிருந்த நேரம் மகன் ஆமினாவின் கைகளில் வளையல்கள் இல்லாமல் இருப்பதை கவனித்து தன் மனைவியிடம் அவளுடைய வளையல்களை தன் அம்மாவிற்க கொடுக்கும்படி சொன்னான்..போனால் மீண்டும் வளையல்கள் வர போவதில்லை என்பதை நன்றாக உணர்ந்தும் வேறு வழியில்லாமல் மருமகள் தான் ஆசையாக வாங்கிய புது வளையல்களை மாமியாரிடம் கழட்டி கொடுத்தாள்...
நினைத்த காரியம் இனிதே முடிந்த மகிழ்ச்சியில் ஆமினா தன் மகளை பார்த்து சிரித்தாள்...நான்கு நாள் போனதே தெரியவில்லை...இனி மகனை அடிக்கடி வரவழைத்து மருமகளின் நகைகளை களவாட ஆமினா முடிவு செய்துயிருந்தாள். இனி எந்த காரணம் கொண்டும் மாமியாரிடம் போகவே கூடாது என மருமகளும் முடிவு செயதுயிருந்தாள்.