ஆயிரத்தில் ஒரு காதல்

அவன்-
கம்பீரமான இளைஞன் !
கவர்ந்திழுக்கும் காந்தக் குரலோன்!
டக் டக் என அவன் நடக்கையில்
தடைகள் தானாய் விலகி
பாதைகள் திறக்கும் !

அவன் -
கண்ணியமானவன் !
அறிமுகமான அடுத்தநொடி
உனது உடையின் வண்ணம்
அற்புதமென அல்பமாய் வழியும்
மூன்றாம்தர வாலிபன் அல்ல !

அவன்-
சூரியனுக்குக் கீழே
எந்த விஷயத்தையும்
ஆழமாய் அலசும்
புத்தி ராட்சசன் !

அவன்-
இளையராஜாவையும்
ஏ ஆர் ரகுமானையும்
ஜேம்ஸ் வசந்தனையும்
ஒருங்கே ரசிக்கும்
இசை பைத்தியம் !

அவனுக்காகவே-
அனுதினம் அலங்கரிக்கும்
என் மல்லிகை மணம் மட்டுமே
அவனை கொஞ்சம் தடுமாற்றும் !

அவன் -
என் கவிதை வாசிப்புக்கு
எசப்பாட்டு லாவகமாய்
கவிவரிகள் பரிசளிக்கும்
கவிச் சுயம்பு !

அவனை காதலிக்கிறேன்-
அவன் அகக் கண்களில்
அவலங்களின் அணுக்கதிர்
அண்டாமல் தடுக்கும்
ஒரு கருநிற கண்ணாடியாய்..
சிகப்பு வெள்ளை ஊன்றுகோலாய்....
காதலுக்கு கண் அவசியமா என்ன ?

எழுதியவர் : ஜி ராஜன் (26-Feb-15, 9:52 am)
பார்வை : 249

மேலே