குழந்தையோடு விளையாடும் அப்பா
பொம்மைத் துப்பாக்கியில் சுடும் போது
குறி எங்கே வைக்கப்பட்டிருப்பினும்,
நெஞ்சில் கைவைத்து
அலறிச் சாயவேண்டும்.
சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தை
அருகில் வந்து, எழுப்பும் வரை
மயக்கத்திலே இருக்க வேண்டும்.
மயக்க நிலை கண்டு,
குழந்தை
துடித்துத் தேம்பி
அழுமுன்னே எழுந்து
வாரி அணைத்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
