ஓவியம் பேசும் உண்மை

..."" ஓவியம் பேசும் உண்மை ""...

பச்சைவண்ண சேலைக்காரி
சிகப்புவண்ண ரவிக்கைகாரி
ஏழு சுரங்களும் மீட்டாத
தனித்துவிட்ட ராகமாய்
ஏகாந்த வேளையில் !!!

கண்ணுக்கு மைதீட்டி
செந்தூர போட்டுவைத்து
செவந்தி பூவும்வச்சு
முறையாய் அலங்கரித்து
அழகாய் வந்த நிலா !!!

வரண்டுவிட்ட வனத்திலே
வஞ்சியவள் வாஞ்சையோடு
வழிமீதே தன் விழிவைத்து
வாடிய புன்னகையோடு
அரிதாரம் பூசாதந்த !!!

அந்திமாலை வேளையில்
வண்ணமது கலையாதே
மெளனமாய் பெண்மயில்
தோகைவிரித்தே அவள்
தேகம் அணைக்கவரும் !!!

காளையை அடக்கியிவள்
கழுத்தில் கட்டிய தாலியின்
சொந்தக்காரனுக்காய் இவள்
சோகமாய் காத்திருக்க
தீண்டும் தென்றலிலும் !!!

சுகமில்லை குழல்கொண்ட
பூவினிலும் மணமில்லை
அந்த மணக்காத பூவை
வாடாமல் நோக்கிவிட மூங்கில்
கூடைகொண்டு மூடிக்கொண்டாள் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீத்(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீத்(எ)சகூருதீன்.. (26-Feb-15, 10:27 am)
Tanglish : oviyam pesum unmai
பார்வை : 219

மேலே