காகிதம் எழுதுகிறேன்

கல்லூரி காளை ஒருவன்
வீசிவிட்டு சென்ற
காகிதம் நான் எழுதுகிறேன்

கவிஞன் கைகளில் கிடைத்தால்
கற்பனை ஆகிடுவேன்

கணக்கன் கைகளில்
கிடைத்தால் நானோ
கணக்குகள் ஆகிடுவேன்

ஓவியன் கைகளில்
கிடைத்தால் நானோ
ஓவியம் ஆகிடுவேன்

ஒரு பைத்தியம் கைகளில்
கிடைத்தால் நானோ
துண்டாய் ஆகிடுவேன்.

காதலன் கைகளில்
கிடைத்தால் நானோ
கவிதை ஆகிடுவேன்

கிடைத்திடும் கைகளை
பொறுத்தே நானும்
மாறிட செய்வேனே.

எனினும் எனக்குள்
இருக்குது ஒரு கவலை
அதை எழுதிடும் போதே
எனக்குள் அழுகை
வரத்தான் செய்கிறதே

நீங்கள் வந்திட
இருவர் இருந்திட வேண்டும்
ஆனால்
நான் இங்கு வந்திட
ஒரு மரம் தான்
இறந்திட வேண்டும்
இதுதான் எனக்குள்
இருக்கும் கவலை

எழுதியவர் : sujatha (26-Feb-15, 2:41 pm)
பார்வை : 77

மேலே