கொசு

கொசு!
மெய்ஞானியையும் அஞ்ஞானியாக்கும்!
அஹிம்ஸாவும் ஹிம்ஸாவாகும்!

கொசு!
தேகம் தீண்டி தாகம் தீர்க்கும்!
அந்தி சாய பந்தி வைக்கும்!
அந்தரங்கத்தில் அட்சதையாகும்!

கொசு!
மோன நிலையின் மானம் கலைக்கும்!
அனுமதி இல்லா அந்நிய பிரவேசம்!

கொசு!
சங்கீத ரீங்காரமாய் சந்தோஷம் குலைக்கும்!
சரி கம பத நி யின் சங்கட அபிநயம்!

கொசு!
அஞ்சி பதுங்கியவர்க்கு(வலையில்) அவஸ்தை இல்லை!
அஞ்சாதவர் வாழ்வில் நிம்மதி இல்லை!

கொசு!
பசுவை கொன்றால் பாவம் என்பர்
கொசுவைக் கொன்றால் லாபம் என்பரோ!

எழுதியவர் : கானல் நீர் (26-Feb-15, 2:01 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : kosu
பார்வை : 91

மேலே