விண்வெளியும் கோள்களும்

இயற்கை எல்லாம் கூடி நின்று
விண்வெளியில் கச்சிதமாய்
பூமியிலே நிகழ்வதெல்லாம்
தன்னகத்தே படம் பிடித்து
இயற்கையின் எழில் குன்றா
அத்தனையும் அதன் நோக்கில்
ரசிக்கின்றது வாழ்த்துகின்றது
விண்ணில் உள்ள கோள்கள் எல்லாம்
வியப்புடன் பார்க்கின்றது
பூமியின் தேவை எல்லாம்
நாம் தானே கொடுக்க வேண்டும்
நம்மால் தான் இத்தனை செழிப்பும் பூமியிலா/
பூமியின் கௌரவமும் கச்சிதமும்
நம்முடைய வரங்களினால்
பூமியின் நலன்களும் பலன்களும் பெருகி
சிறப்பு மிக்க புண்ணிய தலமாக
பூமி மாறுவதைப் பார்க்கும் போது
மிக மிகப் பெருமை தான்
பூமியின் ஜீவன்கள் எல்லாம்
புளகாங்கிதம் அடைகிறது நம் சேவையிலே
நாம் விண்வெளியில் உலவுவதால்
பூமியின் அத்தனை உயிர்களையும்
மரங்களையும் செடி கொடிகளையும்
பயிர் பச்சைகளையும்
நீர்நிலைகளையும் மலைகளையும் நிலங்களையும்
அவற்றின் ஒவ்வொன்றின் அசைவுகளையும்
செழிப்பு சிறப்புக்களையும்
கண்டு கொள்ளக் கூடியதாய் உள்ளது
பூமியின் தேவை என்னவோ
எம் சேவையும் அதுவேதான்
அழகிய பூமியும் அங்குள்ள மக்களும்
அழகிய வாழ்க்கை வாழ்ந்திட
எங்கள் நல் ஆசி என்றும் என்றும்
வாழ்த்துகின்றன விண்வெளியும் கோள்களும்

எழுதியவர் : பாத்திமா மலர் (26-Feb-15, 1:40 pm)
பார்வை : 78

மேலே