அன்பின் அடையாளம் அவரவர் அறிந்துகொண்ட வழியில்

அன்பின் அடையாளம்..!

வந்துதித்த வையகத்தில்
வாழும்வரை போதித்து
அன்பினாலே அற்புதங்கள்
அதிசயமாய் செய்தவரை

நட்புகளிலொரு கள்வன்
நயவஞ்சகம் செய்துவிட
காட்டியவன் கொடுத்துவிட
கைதியாகி விட்டாரே..!

தந்தையவன் மந்திரத்தை
தார்மீகப் பொறுப்பேற்று
சிலுவையதை சுமந்தபடி
சிந்திக்க வைத்தாரே...!

உடலென்று உயிரென்று
உருவத்தில் துருவமெனும்
உறுப்புகளை இணைத்தபடி
உயிரென்னும் இதயம்தான்

சிலுவையென சொன்னபடி
சிந்தினாரே குருதியினை
அயலானாய் இருந்தாலும்
அன்புசெய் எனச்சொல்லி..!

இதயமதை கல்லாக்கி
இரக்கமதை மூடிவைத்து
பகைமனதில் வாழ்வோரை
பாவியென்று சொல்கின்றார்..!

மதமெல்லாம் மனிதனவன்
மதிவைத்து எழுந்தாலும்
அவைசொல்லும் அன்புக்கு
அடையாளம் இச்சிலுவை..!

மாயமெனும் உலகத்தில்
மாறிப்போகும் தருணத்தில்
பழிவாங்கும் படலமெலாம்
பாவமென சொல்லியவன்

உண்மையதை உள்வைத்து
உள்ளத்திலே அன்புவைத்து
வலிசுமக்க வாழ்வோருக்கு
வழிகாட்டி சிலுவையென்றார்..!

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜி (26-Feb-15, 8:09 pm)
பார்வை : 204

மேலே