ஊரில் என்ன கண்டாய் கண்ணா
பனையும் பாறையும் சூழ்ந்து நின்றால்
தென்னையும் குன்றையும் திசையெங்கும் கண்டால்
அந்த ஊர் எந்தன் ஊர்
வாழ்வதும் வீழ்வதும் வான வேடிக்கையாய் நடந்தால்
'வாழ்ந்துட்டாய்யா' என அதனையும் அடைத்தால்
அந்த ஊர் எந்தன் ஊர்
தலைமுறைக்கல்லயென கண்டதையும் அழித்தால்
தலைக்குகொருமுறையென கண்டவற்றில் பங்களித்தால்
அந்த ஊர் எந்தன் ஊர்
மண்(ஐ) மணம் கொண்ட
சித்திரைப் பெண் ஆண்ட
அந்த ஊர் எந்தன் ஊர்