மணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மணி |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 12 |
படம் பார்த்து தெரிவது பாடல் கொண்டறிவது
திருவரங்கத்தில் சம்பவித்த வரலாற்று உண்மையை கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய நாவல்.
பல படையெடுப்பின் போது திருவரங்கத்தில் நடந்த கொள்ளைகளில் கடவுளின் சிலை கொள்ளை மிகவும் அதிகம்.
அப்படி கொள்ளை போன சிலையை சில இளைஞர்கள் தேடி கண்டுபிடிகிறார்களா? கண்டுபிடித்தாலும் அதை மீட்க்க முடிந்ததா? என்பதை இந்நாவலில் சிறப்பாக எழுதியுள்ளார், ஸ்ரீவேணுகோபாலன்.
இரா.முருகவேள் அவர்களால் எழுதப்பட்ட நூல்., மிளிர் கல்.
சிலப்பதிகார பயண வழியின் நவீனத்தேடலான, இந்நூலை வாசிக்கும் போதே பல எண்ணற்ற ஆச்சரியங்களையும் தகவல்களையும் அறிய முடிகிறது.
நாம் வாழும் பகுதியில் நமது காலத்திலும் சிலப்பதிகாரத்தைப் போன்ற மிளிர் கற்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற உணர்வை நம்முள் விதைக்கிறார், இரா.முருகவேள்.
எண்ணத்தின் வழி வந்ததென்றால்
அதுவும் இதுவும் பார்வை போலொன்றா
இதன்வழிதான் எண்ணம் வருமென்றால்
அதுவும் இதுவும் கண்கள் போலிரண்டா
அறிவின் கண் அதுவும்
மொழியின் கண் இதுவும்
என்றும் புலப்படுவதில்லை
எண்ணத்தின் வழி வந்ததென்றால்
அதுவும் இதுவும் பார்வை போலொன்றா
இதன்வழிதான் எண்ணம் வருமென்றால்
அதுவும் இதுவும் கண்கள் போலிரண்டா
அறிவின் கண் அதுவும்
மொழியின் கண் இதுவும்
என்றும் புலப்படுவதில்லை
ஞாயிறும் தயங்கியெழ
நானுமதில் மயங்கிவிழ
எழுந்து நடந்தேன்
வண்ண மலர்களும் அசையாமலிருந்துவிட
வண்டாய் கண்களும் ஆசையாலுருமாறிவிட
பறந்து திளைத்தேன்
சிறகை விரித்துவிட
இலையை அணைத்துவிட
மேனி மறைந்துவிட
மேற்கில் தெரிந்துவிட
நின்று வியந்தேன்
வாசகமும் அலையா யெழுந்துவர
வாசகரும் சிலையா யிருந்துயெழ
மனதும் நிறைந்து வழிந்துவிட
வணங்கி சென்றேன்
இவையனைத்தும் கண்டும் காணாமலிருந்தது
காவலிருக்கும் ஆனை
கேள்வி ஞானம் என்றும் கேள்விகுறியா என்றேன்
கேள்வி குறியது தேடும்வழிய தென்றது
புயலாய் வரவு பேரிடராய் செலவு என்றேன்
திட்டம் இருப்பது பருவத்தில் வருவதென்றது
பருவம் இருந்தது இருப்பும் கரைந்தது என்றேன்
ஆசை கலந்தது அவையும் களைவ தென்றது
கதவுகளில்லை கைப்பொருளுமில்லை என்றேன்
நிலையேயில்லை நிலைப்பதுமில்லை யென்றது
சந்ததியுண்டு சிந்திப்பதுமுண்டு என்றேன்
அன்பை செலவிடு பண்பை வரவிடு வென்றது
வேகம் குறையுது காலம் கரையுது என்றேன்
தேய்வது என்றும் வளர்வ தென்றது
வெளிர்மஞ்சள் நிறகதிர்கள் இருப்பதில் பாய்வதைப்போல்
இளம்பச்சை நிறதளிர்கள் பாய்வதில் மிதப்பதைப்போல்
நீலநிற மணிச்சிரலும் மிதப்பதில் பறப்பதைப்போல்
பலவண்ணத்தில் உட்புகுந்தேன் உனைக்கண்ட தைக்காண
பனையும் பாறையும் சூழ்ந்து நின்றால்
தென்னையும் குன்றையும் திசையெங்கும் கண்டால்
அந்த ஊர் எந்தன் ஊர்
வாழ்வதும் வீழ்வதும் வான வேடிக்கையாய் நடந்தால்
'வாழ்ந்துட்டாய்யா' என அதனையும் அடைத்தால்
அந்த ஊர் எந்தன் ஊர்
தலைமுறைக்கல்லயென கண்டதையும் அழித்தால்
தலைக்குகொருமுறையென கண்டவற்றில் பங்களித்தால்
அந்த ஊர் எந்தன் ஊர்
மண்(ஐ) மணம் கொண்ட
சித்திரைப் பெண் ஆண்ட
அந்த ஊர் எந்தன் ஊர்