காவல் யானை
ஞாயிறும் தயங்கியெழ
நானுமதில் மயங்கிவிழ
எழுந்து நடந்தேன்
வண்ண மலர்களும் அசையாமலிருந்துவிட
வண்டாய் கண்களும் ஆசையாலுருமாறிவிட
பறந்து திளைத்தேன்
சிறகை விரித்துவிட
இலையை அணைத்துவிட
மேனி மறைந்துவிட
மேற்கில் தெரிந்துவிட
நின்று வியந்தேன்
வாசகமும் அலையா யெழுந்துவர
வாசகரும் சிலையா யிருந்துயெழ
மனதும் நிறைந்து வழிந்துவிட
வணங்கி சென்றேன்
இவையனைத்தும் கண்டும் காணாமலிருந்தது
காவலிருக்கும் ஆனை