மரமல்லி

தெளிவானம்
நீள்வெளி
முழுநிலவு

பின்மாலை மழையின்
எஞ்சிய சிறுகுட்டைத்
தேங்கல் நீர்

உதிர்ந்து இறங்கிய மீன்களை
உச்சியில் சூடி
நிறைத்துப்பூத்து நிற்கும்
மரமல்லி

நீரில் முகம் பார்க்கும்
நிலவின் பிம்பத்தை
உதிர்ந்து உதிர்ந்து கலைத்தபடியே
இரவை நீட்டிக்கும்
மரமல்லி பூக்கள்

பூவிழுந்தோறும்
அலை எழும்தோறும்
வெப்பம் கொள்ளும் காற்று
உன்மத்தமேறி அலைகிறது
கிளைகளுக்கும்
அலைகளுக்குமாக

இந்த இரவு
முடிவதாயில்லை
நிலவும் விடுவதாயில்லை.


  • எழுதியவர் : சோழகக்கொண்டல்
  • நாள் : 9-Mar-15, 1:02 am
  • சேர்த்தது : சோழகக்கொண்டல்
  • பார்வை : 68
Close (X)

0 (0)
  

மேலே