அநித்தியங்கள்

மலரிதழில்
உதிரும் பனித் துளி
ஒளிரும்
மண்ணில்
உதிரும் பனித் துளி
மறையும்
மலர் நானும்
மண்ணில் உதிர்ந்து
மறைவேன் !

கதிரொளியில் நீ
மறையும் முன் உன்னை
ஏந்தி நிற்கிறேன்
மண்ணில் எல்லாம்
அநித்தியங்களே !
அநித்தியங்களுக்கிடையில்
ஓர் தற்காலிக
வாசத்தில் பனித் துளியே
நீயும் நானும் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Mar-15, 11:48 pm)
பார்வை : 119

மேலே