காலமிட்ட கோடு

கேள்வி ஞானம் என்றும் கேள்விகுறியா என்றேன்
கேள்வி குறியது தேடும்வழிய தென்றது
புயலாய் வரவு பேரிடராய் செலவு என்றேன்
திட்டம் இருப்பது பருவத்தில் வருவதென்றது
பருவம் இருந்தது இருப்பும் கரைந்தது என்றேன்
ஆசை கலந்தது அவையும் களைவ தென்றது
கதவுகளில்லை கைப்பொருளுமில்லை என்றேன்
நிலையேயில்லை நிலைப்பதுமில்லை யென்றது
சந்ததியுண்டு சிந்திப்பதுமுண்டு என்றேன்
அன்பை செலவிடு பண்பை வரவிடு வென்றது
வேகம் குறையுது காலம் கரையுது என்றேன்
தேய்வது என்றும் வளர்வ தென்றது

எழுதியவர் : மணிச்சிரல் (6-Mar-15, 5:46 pm)
சேர்த்தது : மணி
பார்வை : 110

மேலே