மரம் கொத்தி பாராய் மனிதனையும் பாராய்

குஞ்சுக்கு சிறுவீடு அமைக்கும் பறவை
மரத்தை கொத்தி !
மரத்தை கொத்தி !
மரத்தை வீழ்த்தி டாமல்
மரத்தில் மகிழ்ந்து வாழும்
ஐந்த் றிவுசசீவன் வாழ்வை பாராய் !

மரத்தை வெட்டுவான் காட்டை அழிப்பான்
மழைவளம் குலைப்பான்
மண்வளம் கெடுப்பான்
மரமழித்து மாளிகை செய்வான்
மண்ணழித்து கல்லையா தின்பான்
ஆறறிவு மனிதன் செயலும் பாராய் !

------கவின் சாரலன்
இரண்டும் இணைக் குறள் ஆசிரியப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-15, 10:56 pm)
பார்வை : 442

மேலே