என்னை யாரென்று எண்ணி எண்ணி

தன்னையே பெரிதென்று
நினைக்கின்றானடி ..மனிதன்
தன்னிலை மறந்திங்கு
குதிக்கின்றானடி...!
உண்மையில் தன்னுயரம்
கண்ணாடிமுன் பார்த்திடாமல்
தன்னையும் இழக்கின்றானடி ..நிதமும்
விண்ணையும் இகழ்கின்றானடி!
பொய்யுரைகள் உண்மையென்று
புகழுரைகள் தனையேற்று
காற்றினில் பறக்கின்றானடி..கனவில்
விண்ணைத்தாண்டி மிதக்கின்றானடி !
இத்தனை நாள் வரையில்
இருந்த நிலை மறைத்து
இந்திரனாய் நினைக்கின்றானடி ..என்றும்
அகந்தையில் உழல்கின்றானடி !
எப்பொழுதும் தன்னை விட
உயர்ந்தவரும் உள்ளாரென
பக்குவமும் எரிக்கின்றானடி ..பதராய்
வாழ்ந்தே மறைகின்றானடி !