எல்லை தாண்டி
துன்பம் சூழ்ந்திருக்கும் நிலையினில்
துடிப்பவன் நிலைக்கு வருந்தி
உதவிடும் வழியிருந்தால் உதவிட
அச்செய்கை மாண்புறு
மனித நேயத்தின் கீழ் வரும்..!
அஃதன்றி ..
பிறிதொருவன் விவகாரம்
அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்
அத்துமீறி அத்தனை
நுட்பமாய் கேட்டுணர்ந்து
மனதுக்குள் ..அப்படியாவென்று கூறி
விலகியே போவதெல்லாம்
எல்லை தாண்டிய தீவிரவாதமாகும்..!