என் வாழ்வில் நிறைவேறா ஆசைகள்

தாய் மடியில் ஓர் நிமிடம்
தலைவைத்து உறங்கிட

தந்தை தோள்சாய்ந்து
துயரங்கள் மறந்திட

சோதரன் விரல் பிடித்து
நெடுந்தூரம் நடந்திட

சோதரி தோழியாகி பல
சேதிகள் பேசிட

உலக மனிதரெல்லாம் உறவாகி
ஒன்று கூடி மகிழ்ந்திட

அநாதை என்ற ஒரு சொல்
அகராதியில் இருந்து நீக்கப்பட

அன்பு மட்டுமே அகிலத்தை
ஆட்சி செய்ய

அடக்கு முறைகளை தகத்தெரிந்து
அனைத்திலும் நான் வெற்றி காண .

இப்படியே தொடர்கின்றது என்
வாழ்வின்
நிறைவேறாத ஆசைகள் .!!

எழுதியவர் : கயல்விழி (27-Feb-15, 5:49 pm)
பார்வை : 411

மேலே