மனிதன் என்பவன் தெய்வம் - ஆகலாமா - ஆகலாம்

லஞ்சம் ஆட்சி செய்யும் வரை - ஏழைக்கு
மஞ்சம் இப்படி நடு வீதி.....!!

கள்ளச் சாமியார்களும் - கயவர்களுமே
கடவுளே இனி உன்னில் பாதி..!!

இப்போதாவது கோபம் வருகிறதா
இறைவனே உனக்கு

இந்தக் காட்சியை பார்த்தாவது
இறக்கம் வருகிறதா

கண்டும் காணாததுபோல்
காரில் பறந்து செல்கிறாயே......

கண்ணாடியை இறக்கி விடு - உன்
கண்களில் உனது வளர்ச்சியை நான் காட்ட வேண்டும்....!!

எழுதியவர் : ஹரி (28-Feb-15, 5:06 am)
பார்வை : 60

மேலே