பழைய புகைப் படமும் - புதிய கிராபிக்ஸ் திரைப்படமும்
சின்ன வயதில் தாத்தாவோடு
சிரித்து எடுத்துக் கொண்ட புகைப் படம்
சிந்தனையில் வந்து பதியுது
சில்லென மனசும் குளிருது......!
அந்த தாத்தா இன்று இல்லை
அனுபவித்த அன்பும் எனக்கு இல்லை
அள்ளக் குறையாத செல்வம் உண்டு
அழுகையை தேற்ற ஒரு நாதி இல்லை...
எப்படி இறந்தது மனிதம் ?
எனக்குள் தேடினேன் புனிதம்
எடுடா முகமூடியை முகத்திலிருந்து
என்றது எனக்குள் மனசாட்சி....!
போடா போடா புண்ணாக்கு
போட்டுக் கொள்கிறேன் முகமூடி
பொழுது இப்போது புலர்ந்து விட்டது
புலி வேஷம் பசுவும் போட வேண்டும் - என்றேன் நான்....!!