முத்தத்தில் ஓர் யுத்தம் 555
என்னுயிரே...
உன்னிடம் பேசுவதை போல
பேசிக்கொண்டு இருக்கிறேன்...
எனக்குள்ளும் என் வீட்டு
கண்ணாடி முன்னும்...
பேசுவது அதிகம்
நீயென நினைத்து...
முத்தம் ஒன்று கேட்டேன்
சில முத்தத்துடன் விலகினாய்...
வெட்கமா என்றேன்
நாளைக்கும் மிச்சம் என்றாய்...
இன்றைய முத்தங்களை
எனக்கு மட்டுமே கொடுத்துவிடு...
நாளைய முத்தங்களை
இன்றே சேமிக்க வேண்டாம்...
முதலும் வட்டியுடன்
நான் கொடுக்கிறேன்...
நீ போதும் என்று
சொன்னாலும்...
கொடுத்துவிடு ஓர்
முத்தம் எனக்கு.....