பூக்கள் என்பது
இந்த முறையும்
ஏமாந்து போனது
உன்னைச் சுற்றி வந்த
இன்னொரு பட்டாம் பூச்சி...!
@ @ @
இந்தக் கொளுத்தும் வெய்யிலிலும்
எனக்குத் தும்மல் வருகிறதே
அங்கு மழையா பெண்ணே...!
@ @ @
வெயிலோடு
மழை பெய்யும் போதெல்லாம்
வெற்றுக் காலில்
வீதியில் நீ நடக்கிறாயோ...!
@ @ @
உன் இதழோரப் புன்னகையில்
மட்டுமே
காமம் கைக் குழந்தையாகிறது....!
@ @ @
நீ
தட்டில் சோறு வைத்து
காகத்தைக் கூவிஅழைக்கிறாய்...
எதிரில் உள்ள
குட்டிச் சுவற்றில்
வந்தமர்ந்தன கிளிகள்...!
@ @ @
வார்த்தைகள் கலைத்துப் போட்ட
புதுக் கவிதையை
ஒத்திருக்கிறது
காற்று கலைத்துப் போட்ட
உன்
முன் நெற்றி கூந்தல்...!
@ @ @
உன் அப்பாவைப் போல
நானும் ஒரு கவிதை எழுதிட வேண்டும்
அதற்கு உன் உதவி வேண்டுமே...!
@ @ @
சிலர் காதலிக்கிறார்கள்...
பலர் கவிதை எழுதுகிறார்கள்...
நான் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவன்...!
@ @ @
முறைக்கிறாய்
முள்ளாய் குத்துகிறது...
இருக்கட்டுமே
பூக்கள் என்பது
கள்ளும் முள்ளும் தானே...!
@ @ @