காடு தின்னும் நரியோ முதலில் கழுத்தைத் தானே கவ்வும்
காடு தின்னும் நரியோ முதலில்
கழுத்தைத் தானே கவ்வும்
ஆவி தின்னும் அழகு முதலில்
கண்ணைத் தானே கவ்வும்
பட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு
கண்ணு எப்படி மறக்கும்
உன்னை நொட்டாங்கையில் தொட்டாக் கூட
எட்டாம் நாளும் மணக்கும்
------------------
படம்: தென்மேற்குப் பருவக்காற்று
பாடல்: வைரமுத்து