கருவும் கவிதையும்
..."" ""...
ஆயியாமாயிரம் கருத்தை
உள்ளடக்கியே உருவான
இறைவன் அளித்திட்ட வரம்
உயிரை ஒளித்திருக்கும் வீடு
இணைவிலான இன்பக்கூடு !!!
மஞ்சள் நிற கருவுமுண்டு
உயிர்பெற்றால் உண்டிட
வெண்திரவ உணவுமுண்டு
முட்டையின் முன்னுரை
இறுதிகானாத முடிவுரை !!!
கூடுடைந்ததோர் குருதி
நித்தமும் கருக்கலைப்பு
உயிராகும் முன்பே இது
பலர் உணவாகிப்போவதால் !!!
கவிதை வயல் கரு(த்து)தந்து
கவிதை விதைத்த விதம்மாறி
கவிபடைக்கும் படைப்பாளிக்கு
கருவையிங்கு கவியாக்கியது !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...