யாரை நான் குத்தம் சொல்ல

அழகான அந்தச் சிறுவன்
அழுக்காக அரை நிர்வாணமாய்
அங்கும் இங்கும் சுற்றித் திரிவது
அவனது பிழையா ?

வறுமையினும் கொடிய நோயான
காமநோய்க்கு ஆளாகி அவனை
ஈன்றெடுத்த அப்பெண்ணின் பிழையா ?
இங்கு யாரைநான் குத்தம் சொல்ல

கால்சட்டை வாங்க வழியின்றியும்
கால்வயிறு நிரம்புமளவு உழைக்க
நாதியற்று கிடந்தப் போதும்
மனிதமற்ற இம்மர பூலோகத்தில்

கேள்வி குறியாகும் எதிர்காலத்தை
எண்ணாது அவளுக்கு ,மூன்று
முடிச்சு மட்டும் போட்டுவிட்டு
முடங்கி கிடக்கும் அவனது பிழையா ?

ஆடை அலங்கார ,ஆபரணமாக திரியும்
அவர்களின் மத்தியில் இவர்களை ஏறெடுத்துப்
பார்க்காத பார்நிலையைக் கடந்துவாழும் -இந்தப்
பக்கிகளின் அறியாமை பிழையா ?

இங்கு யாரைநான் குத்தம் சொல்ல

கண்முன்னே கிடக்கும் உயிரோவியத்தை
உதறித்தள்ளி கல்லை கடவுளாய் வணங்கும்
உயர்ந்த மனிதர்களின் கடைக்கண் பார்வை
பட்டாலே இவர்களின் வாழ்வது வசந்தமாகும்

என்பதை மறந்த பெரிய மனிதர்களின்
பிழையதை நான் குத்தம் சொல்வதா ?
இங்கு யாரைநான் குத்தம் சொல்ல ?

எழுதியவர் : பிரியாராம் (3-Mar-15, 12:37 pm)
பார்வை : 256

மேலே