வட்டி மட்டும் குறையவில்லை
என்னவள் பெற்றெடுத்தாள்
பெண் குழந்தை
என் கடமை வளர்த்துவிட்டேன்
வயதுக்கும் வந்துவிட்டாள்
வரன் தேட சுற்றத்தார்
அறிய பூப்புனித நீராட்டு விழா
வட்டிக்கு கடன் வாங்கி
மாப்பிள்ளைக்கு
வண்டி கொடுத்து
மாமியார் கேட்ட
வரதட்சணை கொடுத்து
விமர்சியாக நடந்தது
திருமணம்
என்க்கு வயதும் ஆகிவிட்டது
ஆயுளும் குறைந்து விட்டது
ஆனால் வட்டி மட்டும்
குறையவில்லை ..