மௌனத்தின் வலிகள் -சகி

என் வலிகளில் சில.....

மனம் ஏனோ சில
நேரங்களில் மௌனம்
கொண்டே கொல்கிறது....

வலிகள் மனதை
முழுமையாக ஆட்சி
செய்யும் நிமிடங்களில் ....

வலிகளை உணர்ந்து
கொள்ளவும் உறவு இல்லை ....

புரிந்துக்கொள்ளவும்
உறவு இல்லை ....

ஆறுதல் சொல்லவும் உண்மை
உறவு எதுவும் இல்லை ....

சிரித்துக்கொண்டே நகர்கிறது
காலமும் வலிகளும் ....

எழுதியவர் : சகி (3-Mar-15, 2:55 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 382

மேலே