கண்ணீர்த்துளிகள் -சகி
வலிகள் வார்த்தையின் விளிம்பில் ....
கடந்தகால வாழ்வில் கடந்து வந்த
ஏமாற்றங்களின் வலிகள் ...
நிகழ கால சில உறவுகளின்
வார்த்தையில் மனதை
காயபடுத்தும் வார்த்தைகள் ....
வலிமிகு வார்த்தைகளாக
உதிரும் நிமிடங்களில் மனம்
அழும் நிமிடங்களில் ஏமாற்றிய உறவை
எண்ணி அழுவதா ?
இல்லை ....
மனம் காயபடுமோ
என்று எண்ணாமல் வார்த்தையை
முள்ளாக தூவும் உறவை எண்ணி
வேதனை கொள்வதா ?
புரியவில்லை ...
புரியாமல் சென்ற உறவுகளின்
தவறா ?
புரிந்துக்கொண்டு விட்டுக்கொடுத்த
உறவின் தவறா என்று ?.....
ஆறுதல் என்னவோ
கண்ணீர்த்துளிகள் மட்டுமே.....
எதிர்காலம் மட்டும்
கேள்விக்குறியாகவே ?
அன்றும் இன்றும்....