ஆசை

காலையில்
அம்மாவின் அதட்டலோடு
அரக்கப் பரக்க எழுந்து,
அவசர அவசரமாய்
சாப்பிடக் கூட முடியாமல்
காத்திருக்கும் வண்டியில் ஏறி
பள்ளிச் செல்லத்தான் ஆசை!
நானும் அம்மாவின்
அதட்டலோடு எழுந்து,
அரக்கப்பரக்க
வண்டியில் தான் செல்கிறேன்!
படிக்க அல்ல
பாரங்களை சுமந்து
ஏக்கப் பார்வையுடன்!
ஒத்த வயது தான் என்றாலும்
வறுமையின் வேலை
விலை கலை!
அழகாக சீருடை அணிந்து
அழகுப் பார்க்கத்தான் ஆசை!
சீராக வாழ்க்கை இல்லாதபோது
ஆசைகள் எல்லாம் நிராசைகள்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (3-Mar-15, 3:33 pm)
Tanglish : aasai
பார்வை : 108

மேலே