அம்மா-நாகூர் லெத்தீப்
மூலக்கருவினிலே
பொக்கீசமாய் தாங்கியவள்.......!
மூச்சு கொடிவழியே
பாசத்தை ஊட்டியவள்.......!
வாடாத மலர் போல
என்றுமே பார்ப்பவள்......!
உலகத்தை குழந்தை
வடிவாய் ரசிப்பவள்......!
ஆதரிப்பவள் அன்பை
பரிசாய் தருபவள்.......!
தெய்வத்தின் ஆசியை
என்றுமே பெற்றவள்.....!
ஊனமாகிலும்
பசித்தால் உணவளிப்பவள்.....!
உயிரை கொடுத்து
உடலை ஈன்றவள்.......!
அம்மா என
பொதுவாக அழைப்பவள்.....!
என்னை பெற்றெடுத்த
தெய்வத்தாயவள்.......!