என் மதில்கள்

என் மதில்சுவர்கள்
கடினமானவை தான்!
பல நேரம் அப்பக்க
குரல்கள் மட்டுமே கேட்கிறது.
உணர்சிகள் தெரிவதில்லை!
சில நேரம்
பாலினம் கூட
உணர முடிவதில்லை!
இங்கிருந்து நானும்,
அங்கிருந்து யாரோவும்
கூவிக் கொண்டேயிருக்கிறோம்!
இரவுகளும்,பகல்களும்
மட்டுமே பொத்தாம்
பொதுவாய்ப் போகிறது.
ஆனாலும்,
மனங்களைப் படிக்க முடிவதில்லை!
உடைத்தெறிய தான்
நினைக்கிறேன்!
கடினமான மதில்களை
எதுவோ தடுக்கிறது.
என் மேலே விழுமென்ற
பயமா?
சுமக்க முடியுமா
என்ற கேள்வியா....?

எழுதியவர் : ranibala (3-Mar-15, 7:07 pm)
பார்வை : 142

மேலே