அன்புத் தமிழே என் ஆருயிரே
தீயில் விழுந்து நோயில் ஒழிந்து
பாயில் கிடந்தாலும் - என்றன்
வாயி லிருந்தொரு வண்ணச் செந்தமிழ்
வந்து பிறக்காதோ?
பிறவி கடந்து ஆயுள் முடிந்து
பாடையில் சென்றாலும் - பறை
கொட்டும் முரசது காதில் நுழைந்து
கவிதை பொழியாதோ?
பொழிகிற வானம் நனைகிற பூமி
முடிந்து போனாலும் - தமிழ்
வையக மொன்று வானுக் கப்பால்
மீண்டும் தோன்றாதோ? - அங்கே
தோன்றிய நிலத்தில் தூயத் தமிழில்
ஆட்சி நடக்காதோ? - அதை
கண்டு மகிழ காலம் எனக்கொரு
பிறவி கொடுக்காதோ...?
-------------நிலாசூரியன்.
*கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய ஒரு கவிதையை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட தாக்கமே இந்த படைப்பு.