எனக்கு கோபமா வருது

என்னவென்று சொல்வேன்!!!
என்னவள் என்னிடம் சொன்ன அந்த ஒரு வார்த்தையில் நான்கொண்ட பல அர்த்தத்தை...
என்னவென்று சொல்வேன்!!!
சற்றே ரத்தம் சூடேற,
இருதய துடிப்பு அதிகமாக,
இரு வரி பற்கள் ஒன்றையொன்று அழுத்த,
சரி என்று சொல்லி விடைபெற்றேன்...
என்னவென்று சொல்வேன்...
என்பேச்சில் தவறா?
என்செய்கையில் தவறா?
இனி நீ சொல்லபோவதில்லை...
நான் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை...
என்னவென்று சொல்வேன்...
நான் கொண்டது காதல் அல்ல,
நான் கேட்பது காமம் அல்ல,
தவறாக நினைத்திருந்தால் திருத்திகொள்...
தவறென்று முடிவுசெய்திருந்தால் என்னை மறந்துவிடு...
என்னவென்று சொல்வேன்...
உன்னை பிழை கூறமுடியாது,
நீ செய்த தவறுதான் என்ன?
என்னுடன் பேசியதை தவிர...
வேறென்ன எல்லாமே நான் செய்த பாவம்
யார் மீதும் எனகென்ன கோபம்
தவறென்ன?
பிலைஎன்ன?
தெரிந்தால் திருத்துவேன்...
இல்லையேல் புலம்புவேன்...
வேறு
என்னவென்று சொல்வேன்...