கண்ணீர்

கண்ணீர்...!

ஆன்மாவின் அமுதவூற்று..!
அறிவின் ஜீவநதி..!

ஆத்திரத்தின் திராவகம்..!
ஆனந்தத்தின் பூந்தேன்..!

பிரிவின் பாதையில்
பேசும் ஓவியம்..!

பிரிந்தோர் கூடிடில்
பேசா காவியம்..!

வென்று தோற்றிடில்
திராவகத் தேன்..!

தோற்று வெல்கையில்
சுடுநீர் ஓத்தடம்..!

இது -
சங்கடங்களின்
சாந்தகளுக்கேற்ப...
சலனபடும் சங்கீத அருவி..!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (5-Mar-15, 12:18 am)
பார்வை : 433

மேலே