பூத்தது பூ
விழி விரிய பேரழகாய்
இருக்கின்றாய்
இலையணைத்தே இன்முகம்
காட்டுகின்றாய்
யாரை உன் மனதில் வைத்தாய்?
முழுதாய் மகிழ்கின்றாய்
பெண்ணென்றே நீ
ரகசியம் காக்கின்றாய்
பறித்திட தூண்டும் மனதில்
உன் சுதந்திரம் கேட்கின்றாய்
தொடாமல் செல்கிறேன்
வாடாமல் இருப்பாயோ?
வெண்ணிறப் பூவே