jbaburaj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : jbaburaj |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 18-May-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 19 |
சொல்ல பெருசா ஒன்னும் இல்ல..
உறங்க விடாக் கனவுகள்
காணச் சொன்ன
உன்னத அறிஞனே!
எளிமையின் உருவம் நீ
எல்லோருக்கும்
ஆசிரியனும் நீ!
மாணவனின் பிரியமாய்
இளைஞர்களின் நம்பிக்கையாய்
உயர்வாய் உயர்ந்தாய்!
இலக்கிலாமல் பயணித்தவருக்கு
இலக்கானாய்
இனிய தமிழின் தொன்மையை
நானிலம் ஏற்றி விளக்கானாய்
அறிவின் ஒளி
அறிவியலின் வெளி
அரசியல் வழி
திறன் மிகு சான்றானாய்
சாண்றோனாய்
"கலாம்" என்றே
இதயத்தில் இருந்தே
இவ்வுலகில்
சரித்திரமானாய் நீயே!
பழகிய நாள் கிடைத்த இதம்...
பார்த்த நாள் கொண்ட ஈர்ப்பு ...
பிரிந்த பின்னும் பிரியாத பந்தம் ...
பீடமேறி நீ என்னில் நாடிய சொந்தம்...
புகலிடமாகி நான் உன்னில் தேடிய நெருக்கம்...
பூவென என்னை நீ பூசித்த நிமிடம்...
பெண்ணிவள் உன்னை நேசித்த நொடிகள்...
பேதையிவள் அறியாத தவிப்பு...
பைத்தியமாக உன்னில் நான் கொண்ட மையல்...
பொக்கிஷமென உன்னால் கிடைத்த அன்பு....
போதையென நான் கொண்ட மயக்கம்...
பௌர்ணமியாகி நீ என்னில் ஒளிர்ந்த நாட்கள்...
மரணத் தருவாயிலும், மறக்கா தருணங்களே....
கன்னியிடம் கவிஞன்
ஏன் வீழ்ந்தானென தெரிகிறது...
கவிதையின்
கற்பனையு மிங்கே தோற்கிறது
கண்கள் தொடுக்கும் வீச்சே
கவர்கின்ற போது
கவிண் தொடுக்கும் விரல்களில்
நிள்வதோ மேலும் இளமை
இதழ்களின் உறையில்
உறைகிறதோ அம்பு.. அடடா!!
மன்மதனும் வீழ்கிறானே
எனக்கில்லை என்று
குறியினில் தப்பிட
முயல்வாருண்டோ?
பெண்ணே! நீ
ஏவாமலே சிதைக்கிறாயே
அணுக்களை
அணு அணுவாய்....இன்று
கடைத் தேடி பூ வாங்கி
நடை யாய் ஓடி வந்தேன்
இடை சிறுத்த கொடியாள்
கடைக் கண்ணால்.. தாமதமேன்?
விடைச் சொல்! என்றாள்
கடைப் பூவை நீட்டி.. அன்பே!
விடைச் சொல்ல வருத்தாதே
தடை சொல்லாதே உன்
கடை விழியில் கனிவு காட்டு
மேடை யிட்டு சொல்வேன் என்
உடை யவள் நீயே! என்றேன்
அடை மழையின் குளிரென
புடை சூழும் அன்புனது அறிவேன்
தடையில்லை! தடையில்லை! யென
இடைப் பொழுதில் ஊடல் விட்டாள்
கோடை வெயிலை குளிர்விக்கும்
நடை எழிலாய்! உன் முத்தம்
தடை யின்றி தந்து விடு என்னை
உடை யாய் உடுத்திவிடென்றேன்
முடையும் உணர்வுகளில் காமம்
கடையாதே! காத்திரு ! பொறுத்திரு!
மேடையில் யாவர் முன் மாலையிட்டால்
மடை திறந்த வெள்ளமா
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
மாதவச் செல்வியே மாண்புறு மங்கையே
மேதக மிக்கநல் மித்திரையே !- பூதலத்தில்
சாதனைகள் செய்யும் சகலகலா வல்லியே
கோதகற்றும் உந்தன் பணி .
தெள்ளியநின் சொற்பொழிவு தேனருவி யாய்ப்பாயும்
கொள்ளையின்பம் உன்பேச்சில் கூடிவரும் - உள்ளத்தில்
வஞ்சமின்றி யாவரையும் வாஞ்சையுடன் பேணுமுனை
மிஞ்சிடவே யாருளர் சொல் ?
தொண்டுள்ளத் தோடுபிறர் துன்பந் துடைத்தாய்ப்பூச்
செண்டுதந்து வாழ்த்துவேன் செம்மொழியால் ! - வெண்பாவில்
போற்றியுனைப் பாடிடப் பொன்மகளே, உற்சாகம்
ஊற்றெடுக்கும் என்னுள் சிறந்து .
பன்முக வித்தகியே பைந்தமிழ்ச் சாரலே
கன்னல் குரலால் கவர்ந்திழுத்தாய் -இன்பக்
கவின்கலையாம் நாடகத்தைக் கண்போல்
விழி விரிய பேரழகாய்
இருக்கின்றாய்
இலையணைத்தே இன்முகம்
காட்டுகின்றாய்
யாரை உன் மனதில் வைத்தாய்?
முழுதாய் மகிழ்கின்றாய்
பெண்ணென்றே நீ
ரகசியம் காக்கின்றாய்
பறித்திட தூண்டும் மனதில்
உன் சுதந்திரம் கேட்கின்றாய்
தொடாமல் செல்கிறேன்
வாடாமல் இருப்பாயோ?
வெண்ணிறப் பூவே