திரு Dr APJ அப்துல் கலாம்
உறங்க விடாக் கனவுகள்
காணச் சொன்ன
உன்னத அறிஞனே!
எளிமையின் உருவம் நீ
எல்லோருக்கும்
ஆசிரியனும் நீ!
மாணவனின் பிரியமாய்
இளைஞர்களின் நம்பிக்கையாய்
உயர்வாய் உயர்ந்தாய்!
இலக்கிலாமல் பயணித்தவருக்கு
இலக்கானாய்
இனிய தமிழின் தொன்மையை
நானிலம் ஏற்றி விளக்கானாய்
அறிவின் ஒளி
அறிவியலின் வெளி
அரசியல் வழி
திறன் மிகு சான்றானாய்
சாண்றோனாய்
"கலாம்" என்றே
இதயத்தில் இருந்தே
இவ்வுலகில்
சரித்திரமானாய் நீயே!