மூட நம்பிக்கை
புது மனை புகு விழா
வாங்க நினைத்த நாள் முதல்
மனை புகும் நாள் வரை
பஞ்சாங்கம் பத்து முறை
பார்த்தாகிவிட்டது!
பணம் எனது ஆசை எனது
அதை நிவர்த்தி செய்ய
பஞ்சாங்கம் எதற்கு ?
அமாவாசையும் பௌர்ணமியும்
வெள்ளை மாளிகைக்கு
இல்லையோ ?
தமிழனுக்கு மட்டும்
ஏனிந்த பஞ்சாங்கம்?
தொட்டதெல்லாம் துலங்கியதோ
நீ பஞ்சாங்கம் பார்த்ததால்?
மூட நம்பிக்கைக்கு
மூச்சு கொடுத்து
நீ உன் மூச்சை இழக்காதே!