சந்திப்பு
கடைத் தேடி பூ வாங்கி
நடை யாய் ஓடி வந்தேன்
இடை சிறுத்த கொடியாள்
கடைக் கண்ணால்.. தாமதமேன்?
விடைச் சொல்! என்றாள்
கடைப் பூவை நீட்டி.. அன்பே!
விடைச் சொல்ல வருத்தாதே
தடை சொல்லாதே உன்
கடை விழியில் கனிவு காட்டு
மேடை யிட்டு சொல்வேன் என்
உடை யவள் நீயே! என்றேன்
அடை மழையின் குளிரென
புடை சூழும் அன்புனது அறிவேன்
தடையில்லை! தடையில்லை! யென
இடைப் பொழுதில் ஊடல் விட்டாள்
கோடை வெயிலை குளிர்விக்கும்
நடை எழிலாய்! உன் முத்தம்
தடை யின்றி தந்து விடு என்னை
உடை யாய் உடுத்திவிடென்றேன்
முடையும் உணர்வுகளில் காமம்
கடையாதே! காத்திரு ! பொறுத்திரு!
மேடையில் யாவர் முன் மாலையிட்டால்
மடை திறந்த வெள்ளமாகும் ஆசைக்கு
தடை போட துணிவேனோ நானென்றாள்
கடைப் பூவை தலையில் வைத்து என்
தாடை யில் செல்லமாய் கொஞ்சினாள் பின்
விடைப் பெற்றே போகின்றாள்
நடையை கட்டி நகர்ந்தேன் நான்
அடை காத்து அவளன்பை..