அவள் வெண்பா

செவ்வானப் பொன்சிவப்புச் சித்திரம் தந்திடும்
செவ்விதழ்முத் தம்புத் தகம்

முத்தமவள் செவ்விதழின் புத்தகம் மாலையின்
தத்துவம் பெண்ணவள்மோ கம்

மோகம் இதயம்தான் மீட்டிடும் இன்ராகம்
தேகம்நல் செம்மலர்த்தோட் டம்
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Mar-15, 9:56 am)
பார்வை : 98

மேலே